< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கஞ்சா வழக்கில் மேலும் 2 பேர் கைது
|13 Aug 2023 10:56 PM IST
கோட்டுச்சேரியில் போலீசார் கஞ்சா வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர்.
கோட்டுச்சேரி
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி அருளப்பிள்ளை தெருவில் கஞ்சா விற்றதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வேப்பஞ்சேரியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 24) என்பவரை கடந்த 8-ந்தேதி கோட்டுச்சேரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 510 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா வேப்பச்சேரியை சேர்ந்த அஜித்குமார் (26), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசோக் பண்டா (26) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.