மேலும் 2 பேர் கைது
|ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை அம்மா நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 32). ரவுடியான இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் சேர்ந்து வசித்து வந்தார். அந்த பெண்ணின் மகளை கோபாலன்கடையை சேர்ந்த அஞ்சுகம் என்ற பிரகாஷ் (20) என்பவர் காதலித்து வந்தார். இதை அறிந்த ராஜா, பிரகாசை கண்டித்தார்.
இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பிரகாஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 5-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த ராஜாவை வழிமறித்து வெட்டி படுகொலை செய்தார். இது தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தக்ககுட்டையை சேர்ந்த தங்கமணி (21), ஜி.என்.பாளையம் தினேஷ் (19), அம்மா நகர் மணிகண்டன் (20) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக தமிழக பகுதியில் பதுங்கி இருந்த கோபாலன்கடை பகுதியை சேர்ந்த கலை என்கிற கலைக்குமார் (26), சதீஷ் (26) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.