< Back
புதுச்சேரி
ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
புதுச்சேரி

ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
9 July 2023 10:02 PM IST

காரைக்காலில் பி.ஆர்.டி.சி. பஸ் சக்கரத்தில் நட்டுகள் கழன்ற விவகாரத்தில் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால்

பி.ஆர்.டி.சி. பஸ் சக்கரத்தில் நட்டுகள் கழன்ற விவகாரத்தில் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பி.ஆர்.டி.சி. பஸ்

காரைக்கால் பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 2-ந் தேதி புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக பஸ் (பி.ஆர்.டி.சி.) அம்பகரத்தூர் நோக்கி சென்றது. சேத்தூர் அருகே சென்றபோது பஸ் அங்கும், இங்குமாக சென்றதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் ஆனந்த் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு சோதனை செய்தார்.

அப்போது பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் 8 நட்டுகளில் 4 நட்டுகள் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் 2 நட்டுகள் பாதி கழன்ற நிலையில் இருந்தது. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பொது மேலாளர் ஏழுமலை விசாரணை நடத்தினார். அப்போது பஸ் சக்கரத்தை கழற்றி மீண்டும் பொருத்தும்போது போது சரியாக நட்டுகளை பொருத்தாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போக்குவரத்து கழக பணிமனையில் வேலைபார்த்த ஊழியர்கள் ஞானசேகரன், செல்வம் ஆகிய 2 பேரையும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்