< Back
புதுச்சேரி
புதுச்சேரி
2 பாலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
|21 July 2023 9:33 PM IST
காரைக்காலில் 2 பாலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
திருநள்ளாறு
காரைக்காலில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் வரை 5 கி.மீ. தூரம் நபார்டு வங்கி நிதிஉதவியுடன் ரூ.4.6 கோடியில் சாலை மற்றும் 2 பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதில் சாலைப்பணி முடிவடைந்த நிலையில், பாலங்கள் கட்டும் பணி மட்டும் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அனறு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தொகுதி எம்.எல்.ஏ. சிவா தலைமை தாங்கி 2 பாலங்களையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிதம்பரநாதன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.