< Back
புதுச்சேரி
புதுச்சேரி
2 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைப்பு
|7 July 2023 10:13 PM IST
புதுவையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன.
பாகூர்
கிருமாம்பாக்கம்பேட் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (வயது 22), சந்துரு (21), ஸ்ரீதர் (21) ஆகியோர் 2 நாட்டு வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகளும் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 2 நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் நரம்பை கடற்கரையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் செயலிழக்க செய்தனர்.