< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
|7 Sept 2023 11:19 PM IST
கோட்டுச்சேரி அருகே மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜகணபதி தலைமையில் போலீசார் சோனியாகாந்தி நகரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாக்குப்பையுடன் சுற்றித்திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சோனியாகாந்தி நகரை சேர்ந்த அமுல்சிவா (வயது 40), மகாராஜா (34) என்பதும், மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.