< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
|27 Aug 2023 10:32 PM IST
வில்லியனூர் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்
வில்லியனூரை அடுத்த கோபாலன்கடை அண்ணா நகர் காளிகோவில் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.அப்போது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், அம்மா நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 21), கோபாலன் கடை பகுதியைச் சேர்ந்த சரண் என்ற சரண்ராஜ் (22) என்பதும், சிறுவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.