< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கஞ்சா விற்ற 2 பேர் கைது
|30 Sept 2023 11:59 PM IST
புதுவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்ளை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுவை உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் பிரேம்குமார், சக்திவேலு, செல்லதுரை, மணிகண்டன் ஆகியோர் வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த கிரிகேஷ் (வயது 22), சாரம் சக்தி நகரை சேர்ந்த ஹரிகரசுதன் (21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.11 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.