< Back
புதுச்சேரி
நகை வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
புதுச்சேரி

நகை வியாபாரியிடம் பணம் பறித்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
28 Jun 2023 10:09 PM IST

முதலியார்பேட்டை அருகே நகை வியாபாரியை பீர்பாட்டிலால் தாக்கி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை

முதலியார்பேட்டை அருகே நகை வியாபாரியை பீர்பாட்டிலால் தாக்கி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் இன்று கொம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் சந்திக்குப்பம் பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 28), வில்லியனூர் ஒதியம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்த ராம் விலாஸ் பஸ்வான் (31) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தங்கள் கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கடந்த 26-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் மருதூரை சேர்ந்த பழைய நகை வியாபாரி பிரகாஷ் (35) என்பவரை கொம்பாக்கத்தில் வைத்து பீர்பாட்டிலால் தாக்கி ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணம், ஒரு ஸ்கூட்டர், 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்