< Back
புதுச்சேரி
1.5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
புதுச்சேரி

1.5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தினத்தந்தி
|
11 Oct 2023 10:52 PM IST

கிருமாம்பாக்கத்தில் தடைசெய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமம் இல்லாத நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாகூர்

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் அலுவலக மேலாளர் ரவி, மாசு கட்டுப்பாட்டு குழுமம் பொறியாளர் இளங்கோ, தொழிலாளர் துறை அதிகாரி ஆனந்தி, மற்றும் பஞ்சாயத்து வருவாய் பிரிவு அதிகாரி முகம்மது கபீர் மற்றும் ஊழியர்கள் கிருமாம்பாக்கம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கிருமாம்பாக்கம் பனித்திட்டு ரோட்டில் உள்ள விஷ்ணு பேக்கேஜர்ஸ் கம்பெனியில் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த நிறுவனம் 4 ஆண்டுகளாக உரிமை பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.6,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்