செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்
|செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் சென்றால் அதே இடத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டுச்சேரி
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் சென்றால் அதே இடத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் கூறியதாவது:-
ரூ.1,000 அபராதம்
காரைக்காலில் சாலையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் செல்வோரால் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. அப்படிப்பட்டவர்களால் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் வாகனங்களில் வருவோர் விபத்தை சந்திக்கின்றனர். விபத்தில் சிக்குவோருக்கு உயிரிழப்பு, உறுப்பு இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு வாகனங்களில் செல்போன் பேசிச் செல்வோரை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்பலாம். அவ்வாறு புகைப்படம் கிடைத்த மாத்திரத்தில் அந்த வாகன ஓட்டிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
இன்று முதல்
சாலை விதிகளை மீறி, செல்போனில் பேசிக்கொண்டே செல்பவர்கள் மீதான நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. வணிக நிறுவனங்கள், வீடுகளில் இருக்கும் சி.சி.டி.வி. பதிவுகளின் அடிப் படையிலும் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் எடுக்கும் புகைப்படங்களை 94892 05307 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.