கடற்கரையில் 100 அடி உயர தேசியக்கொடி கம்பம்
|கடற்கரையில் 100 அடி உயர தேசியக்கொடி கம்பம் இன்று நிறுவப்பட்டது.
புதுச்சேரி
கடற்கரையில் 100 அடி உயர தேசியக்கொடி கம்பம் இன்று நிறுவப்பட்டது.
100 அடி உயர கம்பம்
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் 75 இடங்களில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புதுவை கடற்கரை காந்தி திடலிலும் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட உள்ளது. அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு நேற்று 100 அடி உயர கொடிக்கம்பம் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது.
தியாகிகள் சுவர்
இந்த கம்பத்தில் 30 அடி நீளம் 8 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி பறக்கவிடப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதியில் தியாகிகள் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுவரில் இந்தியா முழுவதும் உள்ள 1000 தியாகிகளின் பெயர்கள் இடம்பெற உள்ளன. அதில் புதுச்சேரியை சேர்ந்த தியாகிகளின் பெயர்களும் இடம்பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.