100 நாள் வேலை திட்ட பணிகள்
|வில்லியனூர் அருகே 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
வில்லியனூர்
வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் (100 நாள் வேலை) மங்கலம் தொகுதி மங்கலம் கிராமத்தில் வடக்குப்பகுதி ஏரி ரூ.25 லட்சத்து 57 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்படுகிறது. இதேபோல் மனக்குப்பம் மலட்டாற்றை பலப்படுத்தும் பணி ரூ.17 லட்சத்து 53 ஆயிரத்திலும், சிவராந்தகம் கிழக்குப்பகுதி ஓடை தூர்வாருதல் பணி ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்திலும், அரியூர் ஏரி பலப்படுத்தும் பணி ரூ.18 லட்சத்து 34 ஆயிரத்திலும் என மொத்தம் ரூ.65 லட்சம் செலவில் பணிகள் நடைபெற உள்ளன.
இந்த பணிகளை அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.