< Back
புதுச்சேரி
பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
புதுச்சேரி

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

தினத்தந்தி
|
28 July 2023 9:48 PM IST

திருபுவனை அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை

திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் குற்றவியல் போலீசார் அசோகன், சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் ஆண்டியார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள சாராயக்கடை பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய 10 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 46), ராஜா (37), மன்னாதன் (35), மார்க்கண்டேயன் (57), ஸ்ரீ முருகன் (45), முருகன் (44), சுரேஷ் (32), சுந்தரமூர்த்தி (44), சந்திரகுமார் (36), கார்த்திக் (32) என்பது தெரியவந்தது.

அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்