< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ஓவியம், சுடுமண் சிற்ப கலைஞர்களுக்கு சான்றிதழ்
|19 March 2023 7:11 PM IST
புதுச்சோி கடற்கரை சாலையில் ஓவியம், சுடுமண் சிற்ப முகாமில் சிறந்த கலைஞர்களுக்கு சபாநாயகா் சான்றிதழை வழங்கினாா்.
புதுச்சேரி
புதுவை அரசு கலை, பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் ஓவியம், சுடுமண் சிற்ப முகாம் கடற்கரை சாலையில் நடைபெற்றது.
முகாமில் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஓவிய, சுடுமண் சிற்ப கலைஞர்கள் 100 பேர் பங்கேற்று தங்களின் படைப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதன் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டு முகாமில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.