< Back
தேசிய செய்திகள்
முகநூலில் ஆபாச படங்கள் அனுப்பி பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த வாலிபர்
தேசிய செய்திகள்

முகநூலில் ஆபாச படங்கள் அனுப்பி பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த வாலிபர்

தினத்தந்தி
|
11 Dec 2024 10:18 AM IST

உஸ்மான் என்ற வாலிபர் டாக்டரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு பன்னிமண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் டாக்டராக பணியாற்றி வருகிறாா். அவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த உஸ்மான் என்பவருக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் முகநூலில் குறுந்தகவல் அனுப்பி பழகி வந்தனர். இந்த நிலையில் உஸ்மான், டாக்டரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதனை அவர், பெண் டாக்டரிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்த தொடங்கினார். அத்துடன் தன்னை காதலிக்க வேண்டும் என்றும் உஸ்மான் அவரை தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு பெண் டாக்டர் மறுத்து வந்ததுடன், அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த உஸ்மான், ஆபாச படங்களை முகநூலில் பெண் டாக்டருக்கு அனுப்பி ைவத்துள்ளார். அத்துடன் அவரது படங்களை ஆபாசமாக சித்தரித்தும் அனுப்பி வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்காவிட்டால், ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

உஸ்மானின் தொந்தரவு எல்லை மீறி சென்றதால், முகநூலில் அவரை பெண் டாக்டர் பிளாக் செய்துள்ளார். ஆனாலும் வேறு முகநூல் பக்கத்தில் இருந்தும் அவருக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அவர், இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்