< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
|5 Dec 2024 7:56 AM IST
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் பிரவீன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 25-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து கே.ஆர்.புரம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீன் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பிரவீன் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலரிடம் கடன் வாங்கியிருந்ததும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்தும் வந்துள்ளனர்.
இதனால் மன வேதனையில் இருந்து வந்த பிரவீன், தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.