< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தியேட்டரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
|16 Aug 2024 6:57 PM IST
தியேட்டரில் இளம்பெண்ணுக்கு சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு கலாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தியேட்டர் ஒன்று உள்ளது. இந்த தியேட்டருக்கு கடந்த 10-ந்தேதி பெண் ஒருவர் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன், தனது முன் இருக்கையில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
மேலும் இளம்பெண் தியேட்டர் கழிவறைக்கு சென்றபோது, கழிவறை ஜன்னலில் செல்போனை வைத்து படம் பிடித்துள்ளான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சம்பவம் பற்றி கலாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை கைது செய்து சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.