< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
அரியானாவில் மல்யுத்த வீரர் சுட்டுக் கொலை

27 Feb 2025 11:51 AM IST
மல்யுத்த வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டிகர்,
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டல் கிராமத்தில் நேற்று ஒரு மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண 40 வயதான ராகேஷ் என்ற மல்யுத்த வீரர் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராகேஷை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த ராகேஷை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராகேஷ் கடந்த பல ஆண்டுகளாக சோஹாட்டி கிராமத்தில் அகாரா என்ற ஆன்மிக மையம் ஒன்றை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.