< Back
தேசிய செய்திகள்
ஒரு வயது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை...ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

ஒரு வயது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை...ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
22 Oct 2024 12:10 PM IST

உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் அந்த பெண்ணை துன்புறுத்தியதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் 26 வயது பெண் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் கிணற்றில் குதித்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இந்த்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சன்சுரா கிராமத்தில் நேற்று நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் பெயர் சகுன் யாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இருவருக்கு திருமணம் நடந்துள்ளது. அவரது கணவன் மற்றும் மாமியார் துன்புறுத்தியதாக சகுனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்த்வார் காவல் நிலைய பொறுப்பாளர் எஸ்.என்.பிரஜாபதி கூறுகையில், "கிணற்றில் குதித்த இருவரையும் கிராம மக்கள் வெளியே எடுத்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் இறந்துவிட்டனர். இதையடுத்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் அந்த பெண்ணை துன்புறுத்தியதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே காரணம் தெரியவரும்" என்றார்.

மேலும் செய்திகள்