< Back
தேசிய செய்திகள்
காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரம்: காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய இளம்பெண்
தேசிய செய்திகள்

காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரம்: காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய இளம்பெண்

தினத்தந்தி
|
23 Dec 2024 12:35 AM IST

காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த இளம்பெண், காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மநிலம் முசாபர்நகர் மாவட்டம் சாட்தவாலா கிராமத்தை சேர்ந்த இளைஞரும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதனிடையே, இருவரின் காதலுக்கும் இளைஞரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இளைஞருக்கு வெறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், முசாபர்நகரில் உள்ள ஓட்டலுக்கு இளைஞர் நேற்று தனது காதலியை அழைத்து வந்துள்ளார். அப்போது, தன்னை காதலித்து ஏமாற்றி தற்போது வெறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறாயா? என இளம்பெண் தனது காதலனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றிய நிலையில் இளம்பெண் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு காதலின் அந்தரங்க உறுப்பை வெட்டினார். இதனால், காதலனின் கதறி துடித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை இளம் பெண் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்