நீட் மறு தேர்வு நடத்தப்படுமா? தேசிய தேர்வு முகமை விளக்கம்
|நீட் முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்கப்படும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் குளறுபடி தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், டெல்லியில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது;
"சுப்ரீம் கோர்ட்டு 2018ல் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படியே நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரு கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. கருணை மதிப்பெண் கொடுத்ததால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் கொடுத்துள்ளனர்.
நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. எங்கும் நீட் வினாத்தாள் கசிவு என்பது நடைபெறவில்லை. தவறான வினாத்தாள் காரணமாக 1,600 பேருக்கு மறு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முழு தேர்வு செயல்முறையும் மிகவும் வெளிப்படையானது.
நீட் முறைகேடு குறித்து விசாரிக்க யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்படும். தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குழு விசாரிக்கும். இந்த குழு, ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும். இந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு அவர்கள் கூறினர்.