< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: கிரிக்கெட்டை தொடர்ந்து அரசியலிலும் தடம் பதித்த யூசுப் பதான் பராம்பூர் தொகுதியில் முன்னிலை
|4 Jun 2024 11:44 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கொல்கத்தா,
கடந்த 2021 பிப்ரவரி மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற யூசுப் பதான், அதன் பின்னர் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காளத்தின் பராம்பூர் தொகுதியில் யூசுப் பதான் போட்டியிட்டார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தற்போதைய நிலவரப்படி பராம்பூர் தொகுதியில் யூசுப் பதான் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளார்.