< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: மஹுவா மொய்த்ரா வெற்றி
|4 Jun 2024 8:18 PM IST
கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா வெற்றிபெற்றுள்ளார்.
கொல்கத்தா,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் மேற்குவங்காள மாநிலத்தில் கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா 57,083 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மஹுவா மொய்த்ரா 6,24,711 வாக்குகள் பெற்று இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அம்ரிதா ராய் 5,54,289 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
மஹுவா மொய்த்ரா ( திரிணமூல் காங்கிரஸ்) - 6,24,711
அம்ரிதா ராய் (பாஜக) - 5,54,289