< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: வெற்றியை நோக்கி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்
|4 Jun 2024 3:55 PM IST
மேற்கு வங்காள மாநிலத்தில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யூசுப் பதான் மற்றும் கீர்த்தி ஆசாத் வெற்றி பெறும் வாய்ப்பில் உள்ளனர்.
கொல்கத்தா,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்காளத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கீர்த்தி ஆசாத் மற்றும் யூசுப் பதான் இருவரும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர்.
இதில் பர்தமான்-துர்காபூர் தொகுதியில் போட்டியிடும் கீர்த்தி ஆசாத் 2-வது இடத்தில் உள்ள பா.ஜ.க. வேட்பாளரை விட 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.
மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான் பராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறும் வாய்ப்பில் உள்ளார்.