< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 3 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 3 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
28 Dec 2024 7:51 PM IST

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹரல் என்ற பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் இன்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடிரேன வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தால் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர், ஒரு பெண் மற்றும் ஒரு தொழிலாளி என 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்