< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் அடுத்த முதல் மந்திரி யார்?  நீடிக்கும் இழுபறி
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அடுத்த முதல் மந்திரி யார்? நீடிக்கும் இழுபறி

தினத்தந்தி
|
26 Nov 2024 5:53 AM IST

மராட்டிய சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், அடுத்த முதல் மந்திரி யார் என்பதை முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த 20-ந்தேதி நடந்தது. தேர்தலில் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. குறிப்பாக பா.ஜனதா 132 தொகுதிகளை கைப்பற்றி 3-வது முறையாக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. அந்த கூட்டணியில் உள்ள சிவசேனா 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தேர்தலுக்கு முன் எந்த கூட்டணியும் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்கவில்லை. எனவே மகாயுதி கூட்டணியில் எந்த கட்சியை சேர்ந்தவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக தற்போது முதல்-மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதல்-மந்திரி ஆவாரா அல்லது அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ஆனால், இது தொடர்பாக தற்போது வரை முடிவு எட்டப்படவில்லை. ஏக்நாத் ஷிண்டேவும் முதல் மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க தயராக இல்லை என்று சொல்லப்படுகிறது. பாஜகவினரோ தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக வேண்டும் என உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், முதல் மந்திரி விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலுக்கு நடுவே, தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்றுள்ளார்.

மேலும் செய்திகள்