< Back
தேசிய செய்திகள்
பயங்கரவாதம் இல்லாத காஷ்மீரை உருவாக்க வேண்டும்: அமித்ஷா
தேசிய செய்திகள்

பயங்கரவாதம் இல்லாத காஷ்மீரை உருவாக்க வேண்டும்: அமித்ஷா

தினத்தந்தி
|
18 Sep 2024 5:02 AM GMT

வாரிசு அரசியல் மற்றும் பிரிவினைவாதத்தை ஒழிக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"வலுவான அரசாங்கத்தால் மட்டுமே பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க முடியும்; மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் மற்றும் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த முடியும். கல்வி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். வாரிசு அரசியல் மற்றும் பிரிவினைவாதத்தை ஒழிக்க மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்