கருத்து கணிப்புகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை: காங்கிரஸ்
|கருத்து கணிப்புகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் 81 தொகுதி களை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் 2 கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று மாலை வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரத்தில் இந்த 2 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இதில் மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று பெரும்பான்மையான கணிப்புகள் கூறியுள்ளன. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மராட்டிய மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:-
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறின. அரியானாவில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது. ஆனால் அப்படி நடக்கவில்லை. மராட்டிய தேர்தலில் நாங்கள் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். கருத்து கணிப்புகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கருத்துகணிப்புகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்பதுதான் கள நிலவரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.