< Back
தேசிய செய்திகள்
வயநாடு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் இந்திய கம்யூனிஸ்ட்
தேசிய செய்திகள்

வயநாடு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் இந்திய கம்யூனிஸ்ட்

தினத்தந்தி
|
18 Jun 2024 9:45 AM GMT

வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை நிறுத்த உள்ளது.

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றிபெற்றார்.

அதேவேளை, ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தவாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையேயான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேசிய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

ஆனால், கேரளாவில் காங்கிரஸ் - இந்திய கம்யூனிஸ்ட் எதிர் எதிரே களம் காண உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஷ்யம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்