< Back
தேசிய செய்திகள்
தங்கச் சங்கிலி மாட்டி அழகுபார்த்த பெண்
தேசிய செய்திகள்

நாய்க்கு ரூ.2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி மாட்டி அழகு பார்த்த பெண்

தினத்தந்தி
|
8 July 2024 11:40 AM IST

சரிதா சல்தான்ஹா என்ற அந்த பெண், வளர்ப்பு நாயான டைகரின் பிறந்தநாளைக்கொண்டாடுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளார்.

மும்பை,

மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஸா என்ற பெண், தனது நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பரிசாக அளித்து சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

மும்பையை சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், தனது வளர்ப்பு நாயான டைகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக செம்பூரில் உள்ள நகைக்கடைக்கு ஷாப்பிங் சென்றுள்ளார். அங்கு தனது நாய்க்கு நகையை தேர்ந்தெடுத்து அதனை அணிவிக்கிறார். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வீடியோவில், சல்தான்ஹா தனது நாய் டைகருக்கு சங்கிலியை தேர்ந்தெடுப்பதை காணலாம்.

சரிதா சல்தான்ஹா நாயின் கழுத்தில் சங்கிலியை போடும்போது, உற்சாகமான மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டுவதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைகளத்தில் வைரலாகி உள்ளது.

மேலும் செய்திகள்