< Back
தேசிய செய்திகள்
சம்பல் மசூதி ஆய்வு விவகாரம்:   விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
தேசிய செய்திகள்

சம்பல் மசூதி ஆய்வு விவகாரம்: விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

தினத்தந்தி
|
29 Nov 2024 11:30 PM IST

சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு நடத்துவது தொடர்பாக புதிய உத்தரவு எதையும் வழங்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியை அண்மையில் ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து அங்கு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இது கலவரமாக மாறியதில் ஏற்பட்ட உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து சம்பல் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், "மசூதி ஆய்வு தொடர்பான விவகாரத்தில் மாவட்ட நீதிமன்றம் எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது. இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்