< Back
தேசிய செய்திகள்
எனது ஸ்வீட் பாக்ஸ்-க்காக காத்திருக்கிறேன் - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி எக்ஸ் பதிவு
தேசிய செய்திகள்

"எனது ஸ்வீட் பாக்ஸ்-க்காக காத்திருக்கிறேன்" - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி எக்ஸ் பதிவு

தினத்தந்தி
|
19 Jun 2024 6:21 PM IST

ராகுல்காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு இன்று (ஜூன் 19) 54-வது பிறந்தநாள். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித்தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில், "என்அன்பு சகோதரர் ராகுல்காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாட்டு மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் வாழ்த்துக்கள்"என்று தெரிவித்து இருந்தார். மேலும் கோவையில் தனக்கு ராகுல்காந்தி ஸ்வீட் பாக்ஸ் வழங்கிய வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், "உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி என் அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின். இன்று எனது ஸ்வீட் பாக்ஸ்-க்காக காத்திருக்கிறேன்" என்று சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்