பணமோசடி வழக்கை விசாரிக்க சென்ற அமலாக்க துறை குழு மீது கொடூர தாக்குதல்; அதிகாரி காயம்
|டெல்லியில் பணமோசடி வழக்கை விசாரிக்க சென்ற அமலாக்க துறை குழு மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் தென்மேற்கு பகுதியில் அமைந்த பிஜ்வாசன் பகுதியில், இணையதள மோசடியுடன் தொடர்புடைய பணமோசடி பற்றிய வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக அமலாக்க துறை குழுவினர் இன்று சென்றனர்.
பி.பி.பி.ஒய்.எல். என்ற இணையதள செயலியின் மோசடியுடன் தொடர்புடைய வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவும் செய்யப்பட்டு உள்ளது. இதில், அசோக் சர்மா மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர் அதிகாரிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அதிகாரி ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவாகி உள்ளது. இதன்பின்பு நிலைமை கட்டுக்குள் வந்தது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்பு, அந்த அதிகாரி தன்னுடைய கடமையில் ஈடுபட்டார் என்று பிற அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் சோதனைக்கு சென்ற அமலாக்க துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.