< Back
தேசிய செய்திகள்
உத்தரகாண்ட்: திருமண வீட்டாரை ஏற்றி சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 30 பேர் பலி
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்: திருமண வீட்டாரை ஏற்றி சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 30 பேர் பலி

தினத்தந்தி
|
5 Oct 2024 5:58 PM IST

திருமண வீட்டாரை ஏற்றி சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் லால்தாங்கிலிருந்து பவுரி நோக்கி திருமண வீட்டார் 40 முதல் 50 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிமண்டி கிராமம் அருகே சென்ற பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைகளில் அனுப்பி வைத்தனர். உள்ளூர் மக்களுடன் காவல்துறையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்