< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசம்: ஓடும் ரெயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: ஓடும் ரெயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
11 Nov 2024 7:12 AM IST

தீயணைப்பு சாதனம் மூலம் புகையை பயணிகள் அணைத்து விட்டனர்.

லக்னோ,

டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நோக்கி உஞ்சாஹர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில், உத்தரபிரதேச மாநிலம் எடாவா ரெயில் நிலையம் அருகே சென்றபோது ஒரு பெட்டியில் ஒரு பயணியின் பையில் இருந்து திடீரென புகை வரத் தொடங்கியது.

பீதியடைந்த பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து தகவல் கிடைத்து, ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பரூகாபாத் ரெயில் நிலையம் அருகே ரெயிலை தடுத்து நிறுத்தினர். புகை வந்த பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர். அதற்குள் பயணிகள் தீயணைப்பு சாதனம் மூலம் புகையை அணைத்து விட்டனர்.

ஒரு பயணியின் பையில் இருந்த தீப்பெட்டி பாக்கெட்டுகள் உரசிக்கொண்டதால் புகை வந்தது கண்டறியப்பட்டது. அவரை விசாரணைக்காக ரெயிலில் இருந்து இறக்கி போலீசார் அழைத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்