< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தர பிரதேசம்: வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு சிறுமி உயிரிழப்பு - தற்கொலையா என போலீஸ் விசாரணை
|25 Dec 2024 9:26 PM IST
வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டத்தில் உள்ள பட்டுல்கி என்ற கிராமம் அருகே உள்ள ரெயில்வே வழித்தடத்தில், அயோத்தியில் இருந்து லக்னோ நோக்கி 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் ஒரு சிறுமி நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரெயில் ஓட்டுநர், ரெயிலை நிறுத்தியுள்ளார்.
ஆனால் அதற்குள் அந்த சிறுமி ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 15 வயதான அந்த சிறுமி, தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் தண்டவாளத்தில் வந்து நின்றாரா? என சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.