ஆட்டோ மீது டிரக் மோதி பயங்கர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
|உத்தரப் பிரதேசத்தில் ஆட்டோ மீது டிரக் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
ஹர்தோய்,
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் ஆட்டோ மீது டிரக் மோதியதில் 6 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே பில்கிராம்-மாதவ்கஞ்ச் சாலையில் சென்று கொண்டிருந்த டிரக், பைக் ஒன்றின் மீது மோதாமல் இருக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரக்கை போலீசார் பறிமுதல் செய்து இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.