திருமணம் செய்ய மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை
|துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் இறந்துவிட்டதாக நினைத்து ராஜன், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (26). இவர், தனது பக்கத்து ஊரைச் சேர்ந்த 24 வயது பெண்ணைக் காதலித்துள்ளார். ராஜனின் விருப்பப்படி அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்தப் பெண் ராஜனை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
இதனால் கோபமுற்ற ராஜன், பெண்ணின் வீட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணை, துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், அந்தப் பெண் இறந்து விட்டதாக நினைத்து, ராஜன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.