< Back
தேசிய செய்திகள்
உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்  அறிவிப்பு
தேசிய செய்திகள்

உ.பி. ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

தினத்தந்தி
|
2 July 2024 7:20 PM IST

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

மேலும் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்