< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேச சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
|27 Dec 2024 4:35 PM IST
உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கிராத்பூரில் இருந்து பைக்கில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பிஜ்னோர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புத்பூர் நைன் சிங் கிராமத்திற்கு அருகே ஒரு வேனின் டயர் வெடித்தது. இதில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் பைக்கில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்கள் ரவீந்திரன்(35), அவரது மனைவி ஷீத்தல்(30) மற்றும் அவர்களது மகள் ஆயுஷி என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் தெரிவித்தார்.