< Back
தேசிய செய்திகள்
உ.பி. இடைத்தேர்தல்: வாக்காளர்களை அச்சுறுத்தியதாக புகார் - 5 காவலர்கள் சஸ்பெண்டு
தேசிய செய்திகள்

உ.பி. இடைத்தேர்தல்: வாக்காளர்களை அச்சுறுத்தியதாக புகார் - 5 காவலர்கள் சஸ்பெண்டு

தினத்தந்தி
|
20 Nov 2024 6:13 PM IST

வாக்காளர்களை அச்சுறுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஒரு சில இடங்களில் மோதல் சம்பவங்கள் நடந்தாலும், வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மொராதாபாத் பகுதியில் உள்ள பைகான்பூர் மற்றும் மிலாக் சிரி ஆகிய கிராமங்களில் வாக்குச் சாவடியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாக்காளர்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும், வாக்காளர்களின் அடையாள அட்டையை சோதனை செய்து குறிப்பிட்ட ஓரு சமுதாயத்தினரை போலீசார் வாக்கு செலுத்த விடாமல் தடுப்பதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையின் அடிப்படையில், 2 பெண் காவலர்கள் உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்