< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய மந்திரிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
|7 Dec 2024 6:00 PM IST
ரூ. 50 லட்சம் கேட்டு மத்திய மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி,
மத்திய பாஜக அரசில் பாதுகாப்புத்துறை இணை மந்திரியாக செயல்பட்டு வருபவர் சஞ்சய் செத். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி தொகுதி எம்.பி.யான சஞ்சய் செத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத செல்போன் எண்ணில் இருந்து சஞ்சய் செத்தின் செல்போனுக்கு நேற்று மெசேஜ் வந்துளது. அதில், 50 லட்ச ரூபாய் தரவில்லையென்றால் உங்களை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை மிரட்டல் தொடர்பாக மத்திய மந்திரி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் டெல்லி, ஜார்கண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, இந்த மிரட்டல் குறித்து கவலைப்படப்போவதில்லை என்று மந்திரி சஞ்சய் செத் தெரிவித்துள்ளார்.