< Back
தேசிய செய்திகள்
நாளை அமெரிக்கா செல்கிறார் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
தேசிய செய்திகள்

நாளை அமெரிக்கா செல்கிறார் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

தினத்தந்தி
|
22 Aug 2024 9:43 AM IST

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை அமெரிக்கா செல்கிறார்.

புதுடெல்லி,

மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசு முறை பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் விடுத்த அழைப்பை ஏற்று ராஜ்நாத் சிங் அங்கு செல்கிறார்.

இந்த பயணத்தின்போது ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரை ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த பயணத்தின்போது, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட ராஜ்நாத்சிங் திட்டமிட்டுள்ளார். ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணம் இந்தியாவிற்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்