< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய பொது பட்ஜெட் 23-ந்தேதி தாக்கல்
|6 July 2024 4:09 PM IST
மத்திய பொது பட்ஜெட் வரும் 23-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி மத்திய பொது பட்ஜெட் வரும் 23-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.