பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்
|முதல் 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
புதுடெல்லி,
ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக நேற்று மோடி பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் இன்று காலை தனது அலுவலகத்திற்கு சென்ற அவர், முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரதமராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபையின் முதல் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதல் 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த மந்திரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய மந்திரிகளின் இலாகாக்கள் குறித்த விபரங்கள் இன்றைக்குள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.