< Back
தேசிய செய்திகள்
மத்திய பட்ஜெட்- பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட்- பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தினத்தந்தி
|
11 July 2024 4:20 PM IST

மத்திய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

புதுடெல்லி,

2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

2024-25 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொருளாதார வல்லுநர்களுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்