< Back
தேசிய செய்திகள்
செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்
தேசிய செய்திகள்

செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்

தினத்தந்தி
|
28 Feb 2025 8:39 AM IST

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

தற்போதைய செபி தலைவர் மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் இன்றுடன் (பிப்.28) நிறைவடையும் நிலையில், மத்திய அரசு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டேவை நியமித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வெளியிடப்பட்ட அரசாணையில்,

'மத்திய நிதி மற்றும் வருவாய் துறைச் செயலராக உள்ள துஹின் காந்த பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பதவியேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியை வகிப்பார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987-ஆம் ஆண்டின் ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே, நிதியமைச்சகத்தில் வருவாய் துறையைக் கையாளும் மிக மூத்த அதிகாரியாக பணி புரிந்து உள்ளார். பல்வேறு அரசுத் துறைகளில் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். அவர் கடந்த செப்டம்பர் 2024 இல் நிதிச் செயலாளராக ஆனார். அதற்கு முன்பு, நிதி அமைச்சகத்தின் கீழ் வருவாய்த் துறையை வழிநடத்தினார். அதற்கு முன்னதாக பொது நிறுவனங்கள் துறை (DPE), பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) ஆகியவற்றில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் செய்திகள்