< Back
தேசிய செய்திகள்
குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
31 Oct 2024 6:43 AM IST

சத்தீஸ்காரில் குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கார் மாநிலம் தம்தாரி மாவட்டத்துக்கு உட்பட்ட பெலர்கான் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் குளத்துக்கு குளிக்க சென்றனர். அங்கே அவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது ஒரு சிறுமி திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவர் குளத்தில் மூழ்கத்தொடங்கினார். அவரை மீட்கும் முயற்சியில் மற்ற 2 சிறுமிகளும் அடுத்தடுத்து மூழ்கினர். இதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், 3 சிறுமிகளின் உடலையும் மீட்டனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் அக்கா, தங்கை ஆவார். குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்