< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது
தேசிய செய்திகள்

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது

தினத்தந்தி
|
22 Nov 2024 8:52 PM IST

கைதானவர்களிடம் இருந்து 8 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பதி,

திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு உத்தரவின்பேரில், செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் அன்னமயா மாவட்டம் ராஜம்பேட்டையை அடுத்த எஸ்.ஆர்.பாளையம் வனப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரோல்லமடுகு பீட் அருகே செம்மரங்களை வெட்டி தோளில் சுமந்து வந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களில் சிலர் தப்பியோடினர். போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை பிடித்தனர். பிடிபட்டவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 8 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, திருப்பதிக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்